இந்தியா, பிப்ரவரி 21 -- நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், தனது உடல்நலம்குறித்து விசாரித்த ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் தனது நன்றியைப் பதிவு செய்துள்ளார், எஸ்.ஜே.சூர்யா.

நடிகர் அஜித்தை வைத்து வாலி என்னும் மிகப்பெரிய ஹிட் கொடுத்த இயக்குநர் எஸ். ஜே. சூர்யா. அதன்பின், நடிகர் விஜயை வைத்து 'குஷி' என்னும் படத்தை இயக்கி, அதனையும் மெகா ஹிட் ஆக்கினார்.

அதன்பின், நடிப்புத்துறை மீது கொண்ட ஆர்வம் காரணமாக, 'நியூ'படத்தை இயக்கி, நடித்து இருந்தார், எஸ்.ஜே.சூர்யா. இப்படமும் ஓரளவு வசூல் ரீதியாக ஹிட்டானது.

இதைத்தொடர்ந்து நடிப்பு மற்றும் இயக்கம் ஆகிய இரண்டு குதிரைகளிலும் சவாரி செய்யத்தொடங்கிய எஸ். ஜே.சூர்யா, அன்பே ஆருயிரே என்னும் படத்தை இயக்கி நடித்தார். அதன்பின், கள்வளின் காதலி, திருமகன், வியாபாரி, நியூட்டனின் மூன்றாம் விதி ...