இந்தியா, பிப்ரவரி 13 -- சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். கூடவே ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். இதையடுத்து பராசக்தி படத்துக்கு குட்டி பிரேக் எடுத்திருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் நடித்து வருகிறாராம்.

இதையடுத்து தனது மனைவி ஆர்த்திக்கு முன்னர் வேறொரு பெண்ணை ஒன் சைடாக காதலித்ததும், அது தோல்வியில் முடிந்ததும் பற்றி சிவகார்த்திகேயன் மனம் திறந்துள்ளார்.

பிரபல ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் தனது முதல் காதல் குறித்து பேசியுள்ளார். அதில், "விஜய் டிவியில் வேலை பார்க்கும் போது அந்த பெண்ணை ஒரு ஷாப்பிங் மாலில் பார்த்தேன். ஆனால் அப்போது அந்த பெண்ணிடம் பேசவில்லை.

அவரை ஒன் சைடாக காதலித்தேன். பின் ஒரு நாள் அந்த பெண் முன்பு காதலித்த...