இந்தியா, பிப்ரவரி 17 -- 'அமரன்' படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப்படத்திற்கு 'மதராஸி' என்று பெயர் வைக்கப்பட்டு இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. சிவகார்த்திகேயன் தன்னுடைய 40 வது பிறந்தநாளை கொண்டாடும் பொருட்டு, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.

இந்தப்படத்தில் ருக்மணி வசந்த் கதாநாயகியாக கமிட் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், வித்யூத் ஜம்வால் வில்லனாக கமிட் செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதையும் படியுங்கள்: - Director vikraman: சூர்யவம்சம் காமெடி.. 'ஷூட்டிங் ஸ்பாட்ல சார் சார்னு கூப்டார்; டென்ஷன் ஆகிட்டேன்' - விக்ரமன் பேட்டி

ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குந...