இந்தியா, ஜனவரி 29 -- Sivakarthikeyan: அமரன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில், சுதா கொங்காரா இயக்கும் புதிய படத்திலும் கமிட் ஆனார். இது சிவகார்த்திகேயனின் 25வது படமாகும்.

இதில் நடிகர் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கிறார். ஹீரோயினாக தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடிக்கிறார். நடிகர் அதர்வா முரளியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி, படத்திற்கு 'பராசக்தி' என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.

முன்னதாக, SK25 என்ற அழைக்கப்படும் இந்த படத்துக்கு சிவாஜி கணேசன் அறிமுகமான பராசக்தி படத்தின் டைட்டிலை வைத்திருப்பதாக பேசப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

இதுதொடர்பாக நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப்பே...