இந்தியா, ஏப்ரல் 8 -- Sivaji Ganesan House: நடிகர் சிவாஜி கணேசன் வீட்டிற்கும், தனக்கும் எந்த சொந்தமுமில்லை என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு ராம்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், இன்று ராம்குமார் அது தொடர்பான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்திருக்கிறார்.

அதில், ' சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்திற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அன்னை இல்லத்தை தனது சகோதரர் பிரபுவுக்கு அப்பா சிவாஜி உயில் எழுதி வைத்துள்ளதால், அதில் எனக்கு எந்த உரிமையும் இல்லை.' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த வழக்கில் நடிகர் பிரபு தரப்பு மற்றும் தயாரிப்பு நிறுவனம் தரப்பு வாதங்களை முன்வைக்க வேண்டிய தேவையிருப்பதால், வழக்கு விசாரணை ஏப்ரல் 14ம் தேதி ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் படிக்க | 'துஷ்யந்திற்கு சிவாஜ...