இந்தியா, ஏப்ரல் 7 -- நடிகர் சிவாஜி கணேசன் வீட்டிற்கும், தனக்கும் எந்த சொந்தமுமில்லை என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு ராம்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

மேலும் படிக்க | 'துஷ்யந்திற்கு சிவாஜி வீட்டில் உரிமை கிடையாது.. ஆகையால்' - உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ராம்குமார் மனு!

ராம்குமார் கடன் வாங்கிய விவகாரத்தில், சிவாஜி வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை எதிர்த்து போடப்பட்ட வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராம்குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சிவாஜி கணேசன் வீட்டில் ராம்குமாருக்கு பங்கோ, உரிமையோ கிடையாது என்று கூறினார்.

இதனை பதிவு செய்த நீதிபதி, சிவாஜி கணேசன் வீட்டில் தனக்கு எந்த பங்கோ, உரிமையோ கிடையாது. எதிர்காலத்திலும் அதன் மீது எந்த உரிமையும் கோரம...