இந்தியா, ஜனவரி 29 -- இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் உடல் உழைப்பை கொட்டுவதை காட்டிலும் உட்கார்ந்தவாறே கணிணி, லேப்டாப்களில் செய்யும் வேலைதான் பலரும் பார்த்து வருகிறார்கள். இந்த வேலைகளை வொர்க் பிரம் ஹோம் முறையில் வீட்டில் இருந்தபடியோ அல்லது அலுவலகத்திலோ நீண்ட நேரம் உட்கார்ந்தவாறு செய்யும் சூழ்நிலையும் உள்ளது. இதனால் ஒரு நாளில் மணிக்கணக்கில் அசையாமல் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.

நீண்ட நேரம் உட்கார்ந்திருந்து வேலை செய்வதால் பல்வேறு உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்தவாறு நீங்கள் செய்யும் வேலை உங்களது உற்பத்தித்திறனை அதிகரித்தாலும், உங்களின் உடல் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்கிறது. அத்துடன் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையிலான ச...