இந்தியா, மார்ச் 5 -- Singer Kalpana Raghavendar Hits: சென்னையில் பிறந்து, தந் 5 வயது முதலே சினிமாவில் பாடல்கள் பாடி அசத்தி வருபவர் பாடகி கல்பனா. இவர், தமிழ் மட்டுமன்றி, தென்னிந்திய மொழிகளிலும் இசை நிகழ்ச்சிகலிலும் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். இந்நிலையில், இவர் தமிழில் பாடி மக்கள் மனம் கவர்ந்த பாடல்கள் எவை எவை என்பதை இங்கு பார்க்கலாம்.

1991ஆம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கத்தில் தமிழில் வெளியான திரைப்படம் என் ராசாவின் மனசுல. இந்தப் படத்தில் மிகவும் ஹிட் அடித்த பாடல் 'போடா போடா புண்ணாக்கு'. இந்தப் பாடல் வெளிவந்த நாள் முதல் இன்று வரை ஒருவரை கிண்டலடிக்க பாடப்பட்டு வருகிறது. இந்தப் பாடலை பாடியது பாடகி கல்பனா தான்.

1999ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் தாஜ்மஹால். இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் என்றாலும் இளைஞர்கள் தங்கள் பெரு...