இந்தியா, மார்ச் 5 -- Singer Kalpana: தென்னிந்திய மொழிகளில் 1500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய கல்பனா ராகவேந்தர் நேற்றைய தினம் ஹைதராபாத், நிஜாம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சுயநினைவின்றி மீட்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்த முதல்கட்ட விசாரணையில் அவர், தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார் என்றும் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டதால் இவர் சுயநினைவை இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், பாடகி கல்பனாவைப் பற்றி தெரியாத சில விஷயங்களை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

பாடகி கல்பனா ராகவேந்தர் 1980ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இவரது தந்தை நடிகரும் பாடகரும் இசையமைப்பாளருமான டி.எஸ்.ராகவேந்திரா. வைதேகி காத்திருந்தாள் படத்தில் ரேவதியின் அப்பாவாக நடித்...