இந்தியா, பிப்ரவரி 7 -- Singaravelar: உலகத்தில் வாழக்கூடிய அனைத்து தமிழர்களுக்கும் ஆதி கடவுளாக திகழ்ந்து வருபவர் முருகப்பெருமான். சிங்கப்பூர் மலேசியா பகுதிகளில் வாழக்கூடிய தமிழர்கள் முருக பெருமானுக்கு மிகப்பெரிய கோயில்கள் கட்டி வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். இந்த உலகத்தில் தமிழர்கள் எங்கு எல்லாம் வாழ்ந்து வருகிறார்களோ அந்த இடத்தில் எல்லாம் முருகப்பெருமானுக்கு கோயில் இருக்கும்.

குறிப்பாக நமது தமிழ்நாட்டில் திரும்பும் திசை எல்லாம் முருக பெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. பல புராணங்களில் உள்ளடக்கி எத்தனையோ கோயில்கள் இன்றும் பிரம்மாண்டமாக திகழ்ந்து வருகின்றன.

அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் திருக்கோயில். குறிப்பாக கூற வேண்டுமென்றால் இது சிவபெர...