இந்தியா, பிப்ரவரி 8 -- Singappenne Serial Today: சன் டிவியில் இரவு 9 மணிக்கு திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகும் தொடர், சிங்கப்பெண்ணே.

இன்றைய சிங்கப்பெண்ணே எபிசோடில், மகேஷ், ஆனந்தியைப் பெண் பார்க்க அவரது விடுதி வார்டனை அழைத்துக்கொண்டு ஆனந்தியின் கிராமத்துக்குச் சென்ற விவகாரம், மகேஷின் அப்பா, அம்மாவுக்கு தெரியவருகிறது.

அப்போது மகேஷின் அம்மா கண்டிக்கிறார், அப்போது பேசும் மகேஷின் அம்மா, '' நான் புரிஞ்சு வைச்சிக்கிட்டதை விடவா, அவள் உன்னை புரிஞ்சு வைச்சு இருக்கப்போறாள். ஆனந்தியை உனக்கு கல்யாணம் பண்ணித் தர்றேன்னு சொல்லிட்டாள் அவள் நல்லவள் ஆகிடுவாளா.. உன்கிட்ட இருக்கிற பணத்துக்காக நல்லவளாக இருக்கிறவ அவ.. நாளைக்கே பணத்தை தூக்கிப்போட்டு என் பிள்ளை வாழ்க்கையில் குறுக்க வராதேன்னு சொன்னாள் உன்னை அவள் திரும்பிகூட பார்க்கமாட்டாள். அவ உனக்கு அம்மாவாடா...