இந்தியா, பிப்ரவரி 4 -- Singapenne Serial: 'சிங்கப்பெண்ணே' சீரியலில் இருந்து இன்று வெளியான புரொமோவில், 'மகேஷின் அம்மா சாப்பாட்டை கொண்டு மகேசை பார்க்க வர, ஆனந்தி ஹாஸ்டல் வார்டன் கொடுத்த சாப்பாட்டை மகேஷிடம் கொடுக்க சென்றாள். இந்த நிலையில், மகேஷின் அம்மாவுக்கும் ஆனந்திக்கும் இடையே மோதலை ஏற்படுத்தியதாக காட்சிகள் காட்டப்பட்டிருக்கிறது

இந்த பிரச்சினையில், கருணாகரனை அழைத்து, ஆனந்தியை வெளியே அனுப்பு என்று மகேஷ் அம்மா ஆர்டர் போட, மகேஷ் அவள் வெளியே சென்றால் நான் கம்பெனியை விட்டு சென்றுவிடுவேன் என்று சொல்லி மிரட்டுகிறான். இதைப்பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்கின்றனர்.

'சிங்கப்பெண்ணே' சீரியலில் நேற்றைய தினம் வார்டன் மகேஷ் உடன் சேர்ந்து ஆனந்தியை பெண் கேட்க ஆனந்தி வீட்டிற்கு சென்றதை மித்ரா சுயம்பின் மூலமாக தெரிந்துகொண்டாள். இதையடுத்து வார்ட...