இந்தியா, பிப்ரவரி 10 -- Singapenne Serial: சிங்கப்பெண்ணே சீரியலில், அன்பு- ஆனந்தியின் காதலை அன்பு அம்மா ஏற்றுக் கொண்டதால் அவர்கள் ஜாலியாக இருக்கும் நிலையில், மகேஷின் நிலைமையோ வேறு மாதிரி இருக்கிறது. ஆனந்தி மீது கொண்ட காதலால் ஏற்கனவே மகேஷிற்கும் அவரது அம்மாவிற்கும் பிரச்சனை இருந்தது. இந்நிலையில், ஆனந்திக்காக மகேஷ், ஹாஸ்டல் வார்டனிடம் பேசியதும் மகேஷ் அம்மாவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதனால் மகேஷ் அம்மா அவரை பலமுறை எச்சரித்தும் உள்ளார். அத்துடன் என்னை விட உனக்கு அந்த ஹாஸ்டல் வார்டன் தான் முக்கியம் என்றால் நீ உனக்கு பிடித்த இடத்திலே இருந்து கொள்ளலாம் என்றும் திட்டி உள்ளார். இதனால் மிகவும் மனம் உடைந்த மகேஷ் வீட்டை விட்டு வெளியேறி மேன்ஷனில் தங்க நினைக்கிறார்.

மேலும் படிக்க: அன்புவின் காதலை ஏற்றுக் கொண்ட ஆனந்தி.. பரிதாபத்தில் மகேஷ் நிலைமை....