இந்தியா, பிப்ரவரி 13 -- Singapenne Serial: ஆனந்தியிடம் தன் காதலை நிரூபிக்கும் பொருட்டு வீட்டை விட்டு வெளியேறி லாட்ஜில் தங்கி இருக்கிறார் மகேஷ். இந்த சூழலில் எப்படியாவது மகேஷ் மனதில் இருந்து அழிக்க வேண்டும் எனத் துடித்து கொண்டிருந்த மித்ராவிற்கு, ஆனந்தி அழகனை கண்டுபிடித்து விட்டதும், அவருடன் தொடர்ந்து பேசி வருவதும் தெரிய வந்தது.

இதையடுத்து, அழகன் யார் என்பதை அறிய முயன்ற மித்ரா, ஆனந்திக்கு உதவுவது போல் ஆனந்தியின் நண்பர்களிடம் அழகன் பற்றி விசாரித்துள்ளார். ஆனால், மித்ராவின் இந்த திட்டம் வேலை செய்யவில்லை.

இதையடுத்து, மித்ராவும் மகேஷின் அம்மாவும் கோவிலுக்கு சென்று, மகேஷ் வாழ்க்கையில் இருந்து ஆனந்தி எப்போது வெளியேறுவாள் என்பது குறித்து ஜோசியம் பார்த்தனர். அப்போது, ஆனந்தியை மகேஷ் வாழ்க்கையிலிருந்து அவ்வளவு எளிதில் பிரிக்க முடியாது என்று ஜோசியர...