இந்தியா, ஏப்ரல் 2 -- Singam Puli on Ajithkumar: குட் பேட் அக்லி படத்தின் டீசரில் ரெட் படத்தில் அஜித் பேசி பிரபலமான 'அது' என்ற டயலாக்கை இடம் பெற்று இருந்தது. அது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இது குறித்து அந்தப்படத்தின் இயக்குநர் சிங்கம் புலி அண்மையில் குமுதம் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, 'ரெட் படத்தின் கதையைப் பொறுத்தவரை, அந்த ஹீரோவை ஒரு எழுத்தாளர் ஃபாலோ செய்து கொண்டிருப்பார். அவரைப் பற்றி எழுதிக் கொண்டிருப்பார். இப்படித்தான் அந்தக்கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்தப்படத்தின் கதையின் சாயல் யஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற கேஜிஎப் படத்திலும் இருக்கிறது. அந்தப் படம் வெளியான பொழுதே நிறைய பேர் அது குறித்து என்னிடம் பேசினார்கள்.

அஜித் சார...