இந்தியா, பிப்ரவரி 14 -- நாம் நமது சொந்த ஊரில், நமது வீட்டில் இருக்கும் போது சாப்பாடு என்பது நமக்கு பெரிய பிரச்சனையாக தெரியாது. ஆனால் பணி காரணமாகவோ, படிப்பு காரணமாகவோ நாம் வெளியூரில் தங்கி இருந்தால் தான் நமக்கு உணவின் தேவை புரியும். வீட்டில் வித விதமாக சமைத்து கொடுத்து சாப்பிட்டாலும் அப்போது அதனை புகழ்வதில்லை. ஆனால் தனியாக இருந்து ஹோட்டல் சாப்பாடு சாப்பிடும் போது தான் அதன் அருமை தெரியும். ஆனால் நமக்கும் எளிதாக சமைக்க கூடிய சமையல் தெரிந்து இருந்தால் அதை குறித்து கவலைப்படத் தேவையில்லை. எல்லாரும் எளிதாக செய்யக்கூடிய ஒரு உணவு தான் குஸ்கா. சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருக்கும். இன்று இந்த குஸ்காவை எளிமையாக செய்வது எப்படி எனபதை இங்கு தெரிந்துக் கொள்வோம்.

2 கப் பாஸ்மதி அரிசி அல்லது சாப்பாட்டு அரிசி

2 பெரிய வெங்காயம்

1 தக்காளி

2 டீஸ்பூன் இஞ்சி ...