இந்தியா, பிப்ரவரி 5 -- Simona Halep Retires : முன்னாள் உலக நம்பர் ஒன் வீராங்கனையும், இரண்டு முறை கிராண்ட்ஸ்லாம் வென்றவருமான ருமேனியாவைச் சேர்ந்த சிமோனா ஹாலெப், க்ளூஜில் நடந்த டென்னிஸில் முதல் சுற்றில் தோல்வியடைந்த பிறகு, செவ்வாய்க்கிழமை தொழில்முறை டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

கடந்த ஆண்டு ஊக்கமருந்து சோதனை தோல்வி காரணமாக தடை விதிக்கப்பட்டதால் அவரது வாழ்க்கை ஸ்தம்பித்தது, இந்நிலையில், 2025 ஆம் ஆண்டு தனது முதல் போட்டியில் இத்தாலியின் லூசியா பிரான்செட்டியிடம் 6-1 6-1 என்ற கணக்கில் தோல்வியடைந்து தனது முடிவை அறிவித்தார்.

33 வயதான ருமேனிய வீராங்கனை முழங்கால் மற்றும் தோள்பட்டை வலி காரணமாக தனது சீசனின் தொடக்கத்தை தாமதப்படுத்தினார்.

"இது சோகத்தினாலோ அல்லது மகிழ்ச்சியினாலோ என்று எனக்குத் தெரியவில்லை, இரண்டையும் உணர்கிறேன் என்ற...