இந்தியா, ஜனவரி 28 -- நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி 2002 ஆம் ஆண்ட்ய் வெளியான காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவானார் . அதன் பிறகு சில வெற்றிப் படங்களை கொடுத்த சிம்பு , பல சர்ச்சைகள், எதிர்மறை விமர்சனங்களுக்குப் பிறகு இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் .

கிட்டத்தட்ட முப்பது கிலோ எடையை குறைத்துவிட்டு ரீ-என்ட்ரி கொடுத்தார், மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற வெற்றி படங்களை கொடுத்தார். கடைசியாக இவர் நடித்த பத்து தல படம் ரசிகர்களிடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளார். இந்தப் படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதனிடையே பல பிரச்னைகள், சர்ச்சைகள் வந்து கொண்டிர...