இந்தியா, மார்ச் 29 -- Sikandar OTT: பாலிவுட் ஸ்டார் சல்மான் கான் நாயகனாக நடித்துள்ள சிக்கந்தர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்களிடம் மிக அதிகமாக உள்ளது. இந்தப் படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாளை (மார்ச் 30) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த ஹிந்தி ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை தமிழ் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சிக்கந்தர் படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகளை எந்த ஓடிடி தளம் பெற்றுள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளது.

சிக்கந்தர் படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகளை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் பெற்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியாகும் இந்தப் படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமைகளை நெட்ஃபிளிக்ஸ் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் உரிமைகளுக்காக நெட்ஃபிளிக்ஸ் சுமார் 90 கோடி ரூபாய் செலவிட்டுள்ளத...