இந்தியா, ஜனவரி 28 -- ஹைதராபாத்தில் அண்மையில் நடைபெற்ற இலக்கிய விழாவில் சித்தார்த் விருந்தினராக கலந்து கொண்டார். அங்கு அவர் திரைப்படங்கள், புத்தகங்கள் மீதான தன்னுடைய காதல் மற்றும் பலவற்றைக் குறித்து பேசினார்.

அப்போது அவர் பேசும் போது, தான் சில திரைப்படங்களுக்கு யெஸ் சொல்லி இருந்தால் பெரிய நட்சத்திரமாக மாறியிருக்கலாம் என்று கூறினார்

இது குறித்து அவர் பேசும் போது, ' என்னிடம் பெண்களை அறைவது, ஐட்டம் பாடல்களை படத்தில் வைப்பது. தொப்புளைக் கிள்ளுவது, ஒரு பெண் என்ன செய்ய வேண்டும், எங்கு செல்ல வேண்டும் என்று சொல்வது தொடர்பான பல கதைகள் என்னிடம் வந்தன.

அவற்றில் சிறந்த கதை இருந்தால், சிறந்த முறையில் எடுக்கப்பட்டிருந்தால் அவை வெற்றிக்கரமான படங்களாக மாறியிருக்கும். ஆனால் நான் அதனை நிராகரித்தேன். நான் வித்தியாசமாக இருந்திருந்தால் நான் பெரிய நட்சத்திரம...