இந்தியா, ஜனவரி 31 -- திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் தனது சமூக வலைதளங்களில் சித்த மருத்துவக் குறிப்புக்களை அளித்து வருகிறார். இதன் மூலம் அவர் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அவர் நரம்புத்தளர்ச்சி, உடல், கை-கால் நடுக்கம் மற்றும் அதற்கான எளிய சித்த மருத்துவ குறிப்புகள் குறித்து நம்மிடம் விளக்கமாகத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ள தகவல்கள் பின்வருமாறு,

நரம்புத் தளர்ச்சி என்பது நடுக்கு வாதம் அதாவது ஆங்கிலத்தில் பார்கின்சன்ஸ் நோய் என்று அழைக்கப்படுகிறது. நரம்பு மண்டலத்தால் சரியான இயங்க முடியாத நிலைதான் நடுக்குவாதம் என்று அழைக்கப்படுகிறது. இது நாளைடைவில் மோசமடையும்போது ஒருவருக்கு கை-கால்களில் நடுக்கம் ஏற்படுகிறது. நரம்பு மண்டலம்தான் நம் உடலில் உள்ள நரம்பு செல்களைக் கட்டுப்படுத்துகிறது. அது உடலி...