இந்தியா, பிப்ரவரி 16 -- திருச்சி சித்த மருத்துவர் காமராஜ் தனது சமூக வலைதளங்கள் மூலம் மக்களுக்கு பல்வேறு சித்த மருத்துவக் குறிப்புக்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள இந்த குறிப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

காலையில் இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலையில் கடுக்காய், மண்டலம் உண்ண கோலை ஊன்றி குருகி நடப்பவர், கோலை வீசி குலாவி நடப்பார். அதாவது மகிழ்ச்சியுடன் நடப்பார் என்று பொருள். கோல் ஊன்றி நடந்தவரும் கோலின்றி நடப்பார் என்று பொருள்.

காலையில் இஞ்சியை தோல் நீக்கி தட்டி சாறு எடுத்துக்கொள்ளவேண்டும். 10 மில்லி லிட்டர் தண்ணீரில் 5 மில்லி லிட்டர் இஞ்சிச் சாறு கலந்து பருகவேண்டும்.

சுக்கு என்பது பச்சையான பதத்தில் இருக்கும்போது இஞ்சி என்றும், காய்ந்தவுடன் சுக்கு என்றும் அழைக்கப்படுகிறது...