இந்தியா, பிப்ரவரி 8 -- திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் தனது சமூக வலைதளப் பக்கங்களில் சித்த மருத்துவக் குறிப்புக்களை வழங்கி வருகிறார். அவர் எண்ணற்ற குறிப்புகள் மூலம் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

தேமல் என்பது சருமத்தில் தோன்றும் வெள்ளை திட்டுக்கள். இது உடலின் எந்த பாகத்தில் வேண்டுமானாலும் ஏற்படுகிறது. படர் தாமரை பூஞ்ஜை கிருமியால் சருமத்தில் ஏற்படக்கூடிய தொற்று ஆகும். வட்ட வடிவில் உங்கள் உடலில் தோன்றும் ராஷ்கள் படர்தாமரையாகும். இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவக்கூடியது. வட்டவடிவில் சருமத்தில் தோன்றும் புண்போன்ற இடத்தில் அரிப்பு ஏற்படும். இது தலை முதல் பாதம் வரை எங்கு வேண்டுமானாலும் வரும். குறிப்பாக காற்று அதிகம் செல்ல முடியாத இடுக்குகளில் ஏற்படும்.

தேமல் மற்றும் படர்தாமரை பிரச்னைகள் உள்ளவர...