இந்தியா, பிப்ரவரி 10 -- இளநரை பிரச்னையால் அவதிப்படுகிறீர்களா? பொடுகுத்தொல்லை உள்ளதா? தலைமுடி உதிர்வு அதிகம் உள்ளதா? நீண்ட முடி வளர்வதில்லையா? அதற்கு என்ன இன்றைய வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாகிறது. மேலும் இளநரைக்கு மரபணுக்கள், மனஅழுத்தம், ஊட்டச்சத்துக்கள் குறைபாடு மற்றும் வேதிப்பொருட்களில் நின்று வேலை செய்வது மற்றும் மருத்துவ நிலைகள் காரணமாகிறது. பொடுகுத் தொல்லைக்கு எண்ணெய் மற்றும் எரிச்சல் நிறைந்த சருமம், வறண்ட சருமம், தலைமுடியின் வேர்க்கால்களில் எண்ணெய் படலம் படிந்து பூஞ்ஜைகள் தோன்றுவது, வேதிப்பொருட்கள் நிறைந்த தலைக்கு பயன்படுத்தும் எண்ணெய், ஷாம்பூ உள்ளிட்ட அழகு சாதன பொருட்கள், சொரியாசிஸ் போன்ற சரும கோளாறுகள் ஆகியவை காரணமாகும். ஆனால் உங்களின் இந்த பிரச்னைகளை தீர்க்க எளிய தீர்வு ஒன்று உள்ளது. அது என்னவென்று திருச்சியைச் சேர்ந்த சித்த மர...