இந்தியா, பிப்ரவரி 4 -- நம்மில் பலர் சர்க்கரைநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சர்க்கரை நோய் பாதிப்பு அவர்களுக்கு சிறுநீரக பாதிப்பும் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் தொல்லைகள் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் கூறுவதைக் கேளுங்கள். இதுகுறித்து, அவர் சமூக வலைதளங்களில் அவர் சித்த மருத்துவக் குறிப்புக்களை வழங்கி வருகிறார். சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.

அவர் கூறியிருப்பாதாவது,

உடல் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை பயன்படுத்தும் அளவை பாதிப்பது சர்க்கரை நோய் என்ற அழைக்கப்படுகிறது. குளுக்கோஸ் உடலுக்கு ஆற்றலை வழங்கும் முக்கியமான ஆதாரம் ஆகும். இந்த ஆற்றலால்தான் தசைகள் உருவாகின்றன மற்றும் திசுக்கள் வளர்கின்றன. மூளைக்கும் முக்கியமான ஒன்றாகும்.

இதில் வகைகள் உண்டு. அனை...