இந்தியா, பிப்ரவரி 7 -- திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் கூறியிருக்கும் தகவல்கள் இங்கு பகிரப்பட்டுள்ளன. திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் தனது சமூக வலைதளப்பக்கங்களில் சித்த மருத்துவக் குறிப்புக்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அதில் இதய நோயாளிகள் எளிமையாக பின்பற்றக்கூடிய ஒரு குறிப்பை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது -

இதய நோய்கள் என்பவை இதயத்தின் செயல்பாடுகள் மற்றும் இயக்கம், அமைப்பு ஆகியவற்றை பாதிக்கக்கூடியவை ஆகும். இது ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்புக்களையும் குறிக்கும். இதய நோய்கள் உயிரிழப்புக்குக் கூட காரணமாகும்.

கொரோனரி இதய நோய் - இது பொதுவாக ஏற்படும் இதயநோய் வகைகளுள் ஒன்று. இது இதயத்தின் தமனிகளில் கொழுப்பு சேர்வதால் ஏற்படுகிறது.

ரூமாட்டிக் இதய நோய்கள் - இதய தசைகளில் ஏற்படக்கூடிய சேதம்...