இந்தியா, ஜனவரி 28 -- பெண்களை மிரட்டும் நோய்களில் சர்க்கரை நோய், தைராய்டு நோய், கை, கால், இடுப்பு, மூட்டுவலி நோய், ரத்த சோகை, உடல் பருமன், முடி உதிர்தல், மார்பு கட்டிக், மாதவிடாய், வெள்ளைப்படுதல், கருப்பைக் கட்டிகள் சினைப்பை நீர்க்கட்டி மன அழுத்தம் முசுப்பரு. மலக்கட்டு, தூக்கமின்மை போன்றவை மிகவும் முக்கியமானது ஆகும்.

மேற்கண்ட நோய்கள் வருவதற்கு என்ன காரணங்கள் என்று ஆராய்ந்து பார்த்தால் தற்கால உணவுமுறை பழக்கம், உழைக்கும் நோமாற்றம், குடும்ப சூழ்நிலை மற்றும் மன அழுத்தமே ஆகும். இவற்றை சரியாக கையாளத்தெரிந்த பெண்கள் தான் மேற்கண்ட நோய்கள் வராமல் பாதுகாப்பாக உள்ளனர். கையாளத் தெரியாமலும், கடைபிடிக்க முடியாமலும் இருக்கும் பெண்கள் தான் பல்வேறு இன்னல்களை சந்தித்து குடும்ப அமைதியை, ஆரோக்கியத்தை, சுய ஆரோக்கியத்தை இழந்து தவிக்கின்றனர்.

பல ஆயிரம் ஆண்டுகள...