இந்தியா, பிப்ரவரி 7 -- Shrutika: தமிழ் சினிமாவில் சிறு வயதிலேயே நடிகையாக அறிமுகமாகி, பின் விஜய் டிவியின் குக் வித் கோமாளி டைட்டில் வின்னராக பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் ஸ்ருதிகா. இவர் தொழில் முனைவோராக சாதித்தவரும் கூட.

இப்படி தன்னுள் பல திறமைகள் கொண்டுள்ள ஸ்ருதிகா தான் இந்தி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற முதல் தமிழ் பிரபலம். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த அத்தனை நாளும் தன்நை நோக்கி வந்த பால்களை சிக்ஸர்களாகவே அடித்து ஆடி வந்தார். அது சந்தோஷமாக இருந்தாலும் சரி, கோவமாக இருந்தாலும் சரி எல்லாமே ஃபுல் ஸ்பீடு தான். அப்படிப்பட்டவர், பிக்பாஸ் வீட்டில் டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், திடீரென இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இவரது எலிமினேஷன் வார இறுதி நாட்களில் வைக்காமல், வாரத்தின...