இந்தியா, ஏப்ரல் 8 -- Shruti Narayanan: நடிகை ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ லீக் ஆன விவகாரம் இன்றும் அடங்காத நிலையில், அவர் நேற்று படத்தின் ட்ரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். சின்னத்திரையில் நடித்து வந்த நடிகை ஷ்ருதி, கட்ஸ் எனும் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு வருகிறார். இவர் இந்த திரைப்படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க| லீக்கான வீடியோ.. சூசகமாக பதில் சொன்ன சீரியல் நடிகை ஸ்ருதி நாராயணன்

சென்னையில் நடைபெற்ற கட்ஸ் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் பேசிய ஷ்ருதி நாராயணன், " எனக்கு இந்த பட வாய்ப்பை கொடுத்த இயக்குநர் ரங்கராஜ் சாருக்கு நன்றி. இந்தப் படத்துல நான் செகண்ட் ஹீரோயினா பண்றதா சொல்லி இருந்தாங்க. ஆமா ரெண்டு ஹீரோயின்ல நானும் ஒருத்தி. ...