இந்தியா, மார்ச் 31 -- Shruthi narayanan: பிரபல சீரியல் நடிகை ஷ்ருதி நாராயணனின் பெயரில் ஆபாச வீடியோ உலா வந்து கொண்டிருக்கும் நிலையில், அதனை அவர் ஏஐ வீடியோ என்று மறைமுகமாக குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் அதனை பலரும் பரப்பி வரும் நிலையில், அதற்கு ஷ்ருதி பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில், இது குறித்து நடிகை ஷர்மிளா சினிமா கழுகு யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, ' சினிமாவில் முன்னுக்கு வரவேண்டும் என்று நினைக்கும் ஒரு பெண்ணை எந்த அளவுக்கு அவர்கள் மோசமாக நடத்தி இருக்கிறார்கள். அவர்கள் செய்த அநாகரிமான செயலை நான் எப்படி வார்த்தைகளால் சொல்வது. இதில், அந்தப் பெண்ணினுடைய அறியாமையும் இருக்கிறது.

ஒரு சீரியலுக்கோ அல்லது ஒரு சினிமா பட வாய்ப்புக்கோ நிச்சயமாக யாருமே இந்த அளவுக்கு கேவலமாக நடந்து கொள்ள மாட்டார்க...