இந்தியா, ஜனவரி 26 -- புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கர்நாடாகவின் உச்ச நடிகர் சிவராஜ்குமார் என்ற சிவண்ணா, அறுவை சிகிச்சைக்குப் பின் தாயகம் திரும்பினார்.

சிறுநீர்ப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சிவராஜ்குமார், கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் அவர்களின் மூத்த மகன் ஆவார். இவரது கடைசி சகோதரன் தான், மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமார் ஆவார்.

இந்நிலையில், புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற சிவராஜ்குமார், குடியரசு தினத்தன்று கர்நாடகாவுக்கு திரும்பிய செய்தியைக் கேட்டதும் ஏராளமான ரசிகர்கள் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் பெங்களூரு விமான நிலையத்தின் டோல்கேட் முன்பு திரண்டனர்.

ஏறத்தாழ இன்று காலை 9 மணிக்கு மேல், பெங்களூரு வந்த சிவ ராஜ்குமாரை அனைவரும் உற்சாகமாக வரவேற்றனர். அவரது ரசிகர்கள் ஆப்பிள் மாலை அணிவித்து வரவேற்றனர். திரையுலக ப...