இந்தியா, மார்ச் 26 -- Shihan Hussaini: கராத்தே, வில்வித்தை பயிற்சியாளரும், நடிகருமான ஷிகான் ஹுசைனி அரிய வகை புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து நேற்று முன்தினம் அதிகாலை 1.45 மணியளவில் ஹுசைனி உயிர் பிரிந்தது. ஹுசைனி இறந்த தகவலை அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இவரது கராத்தே, வில்வித்தை உள்பட தற்காப்பு கலை வீரர்கள், திரையுலகை சேர்ந்த பிரபலங்கள், ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹுசைனி மறைவுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த காரத்தே மாஸ்டரான ஷிகான் ஹுசைனி உடல் சொந்த ஊரான மதுரைக்கு இன்று காலை ஆம்பூலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே இருக்கக்கூடிய காஜிமார் தெருவில் உள்ள அவரது உறவினர் வீட்டில் ஹுசைனிய...