இந்தியா, பிப்ரவரி 19 -- Shanam Shetty: வெற்றி மாறனின் உதவி இயக்குநரான வர்ஷா பரத் 'பேட் கேர்ள்' எனும் படத்தை இயக்கி இருக்கிறார். வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் டீசர் குறித்து சனம் ஷெட்டி பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, 'ஆண் பெண் சம உரிமை என்பது, நானும் பத்து பேருடன் படுப்பேன்; தம்மடிப்பேன் என்று கூறுவது கிடையாது; சம உரிமை என்பது சம வாய்ப்புகளை வழங்குவது. சமுதாயத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம அளவிலான வாய்ப்புகள் இருக்கிறதா என்றால், நிச்சயம் இல்லை என்பது தான் பதில்.

கதாநாயகிக்கு கொடுக்கக்கூடிய சம்பளமும், கதாநாயகனுக்கு கொடுக்கக்கூடிய சம்பளம் ஒன்றாக இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை.

ஒரு கதாநாயகனை ...