இந்தியா, பிப்ரவரி 10 -- Sevilla vs Barcelona: லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி 4-1 என்ற கோல் கணக்கில் செவில்லா அணியை வீழ்த்தியது. ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி 7 வது நிடமித்தில் முதல் கோலை பார்சிலோனாவுக்காக போட்டார். ஆட்டத்தில் கால்பந்து 60 சதவீதம் பார்சிலோனா வசமே இருந்தது. முதல் பாதி வரை பார்சிலோனா இரண்டாவது கோலை பதிவு செய்யவில்லை.

அதேநேரம், பார்சிலோனா கோல் போட்ட அடுத்த நிமிடத்திலேயே செவில்லா கோல் போட்டது. அந்த அணியின் ரூபன் வர்காஸ் 8வது நிமிடத்தில் கோல் போட்டார். இரு அணிகளுமே அதன் பிறகு கொஞ்ச நேரம் கோல் போடவில்லை. பார்சிலோனாவின் ஃபெர்மின் லோபஸ் 46வது நிமிடத்தில் அணிக்கு இரண்டாவது கோலை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, அந்த அணியின் ரபின்ஹா ​​55வது நிமிடத்திலும், எரிக் கார்சியா 89 வது நிமிடத்திலும் போட்டனர். இதற்கு...