ஈரோடு,சென்னை,கோவை,சேலம், பிப்ரவரி 13 -- ஈரோடு மாவட்டம் அத்தானியில், அஇஅதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றிய செங்கோட்டையன் பேசியதாவது:

''1972 கட்சி தொடங்கியதில் இருந்து தொண்டனாக இருந்து பணியாற்றியவன் நான். இந்த முறை தோல்வியை தழுவியதற்க்கு காரணம் சில துரோகிகள். அவர்களை அடையாளம் காட்ட வேண்டும். ஒவ்வொரு தலைவர்களுக்கும் ஒரு வரலாறு இருக்கின்றது. அண்ணா திராவிடர் முன்னேற்ற கழகம் என பெயர் வைத்தால் மாநில கட்சிகள் கலைக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியது. அதைத்தொடர்ந்து அனைந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என பெயரை சேர்த்தார் எம்.ஜி.ஆர்.

மேலும் படிக்க: செங்கே...