இந்தியா, மார்ச் 30 -- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ரகசியமாக சந்தித்துவிட்டு வந்ததாக கூறப்படும் நிலையில், செங்கோட்டையனுக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள கே.ஏ. செங்கோட்டையன், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர். சமீப காலமாக, அவர் கட்சியின் பொதுச்செயலாளர் ஈபிஎஸ் உடன் கருத்து வேறுபாடு மற்றும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தையும் செங்கோட்டையன் புறக்கணித்து வருகிறார்.

இந்நிலையில், அவர் திடீரென டெல்லி சென்று நிர்மலா சீதாராமனை சந்தித்தது, அரசியல் வட்டாரத்தில் பல்வேற...