இந்தியா, மார்ச் 31 -- அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் தலைமை உடன் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படும் நிலை எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்துடன் ரமலான் வாழ்த்து செய்தியை வெளியிட்டு உள்ளது கவனம் ஈர்த்து உள்ளது.

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள கே.ஏ. செங்கோட்டையன், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர். சமீப காலமாக, அவர் கட்சியின் பொதுச்செயலாளர் ஈபிஎஸ் உடன் கருத்து வேறுபாடு மற்றும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. அத்திக்கடவு- அவிநாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கியதற்காக கொங்கு பகுதியை சேர்ந்த விவசாயிகள் எடப்பாடி பழனிசாமிக்கு நடத்திய பாராட்டு விழாவில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இல்லாததால் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள...