இந்தியா, ஏப்ரல் 6 -- Selvaragavan: செல்வராகவன் அண்மையில் கோபிநாத் யூடியூப் சேனலுக்கு பேட்டிக்கொடுத்தார். அந்தப்பேட்டியில் அவர் சிறுவயதில் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

மேலும் படிக்க | Director Selevaraghavan: 'ஒன்னரை அணா உதவி பண்ணிட்டு ஆயிரம் கோடிக்கு பேசுவாங்க!' - செல்வராகவன் பேச்சு

இது குறித்து அவர் பேசும் போது, 'சின்ன வயதில் வீட்டில் அவ்வளவு கஷ்டம். சொந்த ஊரிலிருந்து பிழைப்புக்காக குடும்பத்தோடு நாங்கள் சென்னை வந்தோம். முதலில் நானும் என்னுடைய சகோதரியும்தான் இருந்தோம். சென்னை வந்தவுடனே வேலை கிடைக்காது அல்லவா..? அதனால், வீட்டில் அவ்வளவு வறுமை. என்னுடைய அம்மா பக்கத்து வீட்டில் கணவர் அலுவலகத்திற்கு கிளம்புகிறார். அவரின் துணிக்கு கஞ்சி தேவைப்படுகிறது என்று கூறி அதை வாங்கி எங்களுக்கு ஊட்டுவார்.

நான் பள்ளிக்கு சென்று விடுவே...