இந்தியா, மார்ச் 31 -- செங்கோட்டையன் டெல்லி சென்றது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டுமென அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்து உள்ளார்.

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். எடப்பாடி பழனிசாமியின் ஆணைப்படி, கோடை வெயிலின் தாக்கத்தைத் தணிக்கும் வகையில், பாதசாரிகள், ஏழைகள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பாஜக தலைவர் அமித்ஷா, அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறியது குறித்த கேள்விக்கு, "கூட்டணி என்பது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முடிவு. தமிழக நலன் சார்ந்து அமித்ஷாவிடம் பேசியதாக அவர் தெளிவாக விளக்கி உள்ளார்." என்றார்.

மேலும் படிக்க:- 'Ghibli ட்ரண்டில் இணைந்தார் எடப்பாடி பழனிசாமி!' 2026 தேர்தலில் 2K கிட்ஸ்களை கவர புதிய யுக்த...