இந்தியா, ஆகஸ்ட் 14 -- Seeman Vs Varunkumar IPS: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சி நிர்வாகியும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டவருமான காளியம்மாளை விமர்சித்துப் பேசியதாக ஆடியோ வெளியானது. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, அந்த ஆடியோவுக்கு காரணம் திருச்சி எஸ்.பி.தான் என்று சீமான் மறைமுகமாக பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது.

மேலும் அந்த கூட்டத்தில் தமிழக காவல்துறை குறித்தும் சில கருத்துகளைக் கூறியிருந்தார். இதனிடையே, தமிழக காவல்துறையை பொது மேடையில் அவதூறாக பேசியதாகக் கூறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் மற்றும் குடும்பத்தினரு...