இந்தியா, பிப்ரவரி 15 -- பீகாரில் ஒரு தொகுதிகளை கூட வெல்ல முடியாத பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளரா என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

உயரடுக்கு பாதுகாப்பு அண்ணாமலை உள்ளிட்டோருக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. தேவைப்படுகிறது என்பதால் அதை கேட்டு வாங்கி கொள்கின்றனர். விஜய்க்கு இது போன்ற பாதுகாப்பு தேவைப்படுவதால் கேட்டுக் வாங்கி கொள்கிறார். நான் மக்களிடம் இருந்து மக்களுக்காக வந்து உள்ளேன். என்னை பொறுத்தவரை நான்தான் மக்களுக்கு பாதுகாப்பு என்று சொல்லுவேன். தம்பி விஜய் போல் புகழ்பெற்ற நடிகருக்கு என்னை போல் நின்று பேசுவது கடினம். அதனால் பாதுகாப்பு தேவைப்பட்டு இருக்கும்.

குஜராத்தில் நடந்த கலவரத்தில் இறந்த மக்களுக்கு அம்மா, அப்பா உள்ளார்களா இல்லையா?, ஈழத்தில் கொன்று ஒழிக்கப்பட்டவர்களுக்கு அப்பா இல்லையா?, இலங்கை நட்பு ந...