இந்தியா, ஜனவரி 30 -- Seeman vs Kanimozhi: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "பெரியாரை இழிவுபடுத்தும் கூலிகளை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டியுள்ளது என கனிமொழி பேசியுள்ளார். பெரியாரை எதிர்த்து அரசியல் செய்யும் கூலிகள் என கனிமொழி தனது தந்தை கருணாநிதியையும், அக்கட்சியின் தோற்றுநர் அண்ணாவையும் தான் சொல்கிறார். காரணம், நான் பெரியாரை இழிவு செய்யவில்லை. அவர் என்ன பேசியிருந்தாரோ, எழுதினாரோ அதை எடுத்துப் பேசுகிறேன்.

கனிமொழி உட்பட அனைவரும் பெரியாரை பற்றி பேசுகிறார்கள். ஆனால், பெரியார் என்ன பேசினார், என்ன எழுதினார் என்பதை எடுத்துப் பேசத் துணிவு இல்லை. தமிழ்நாட்டில் பெரியாரை திமுகவின் தலைவர் அண்ணா, கருணாநிதி ஆகியோரை விட யாராவது இழிவாக பேசியிருக்கிறார்களா?

கனிமொழி ...