இந்தியா, பிப்ரவரி 18 -- பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் மகன் எங்கு படிக்கிறார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

மத்திய திட்டத்தை பின்பற்றினால்தான் நிதி ஒதுக்குவோம் என்று சொல்வது எப்படி ஜனநாயகம் ஆகும். உங்கள் காசை கேட்கவில்லை. மாநிலங்களின் நிதி வருவாயின் பெருக்கம்தான் இந்திய ஒன்றிய அரசின் நிதி. இந்திய அரசுக்கு என்று வருவாய் பெருக்கத்திற்கு ஏதாவது வழி உள்ளதா? மாநிலங்கள் தரும் வரி வருவாயின் பெருக்கம்தான் நிதி வளமை. இதை செய்தால்தான் நிதி தருவோம் என்று சொல்வது கொடுங்கோன்மை. இந்தி கட்டாயமாக கற்க வேண்டும் என்ற அவசியம் ஏன்?, நாட்டில் உள்ள ஏழ்மை, வறுமை, பசி, பட்டினி, வேலை இன்மை எல்லாத்திற்கும் ஒரே மருந்து இந்தி கற்பதுதானா?, இந்தியை ஏன் வலிந்து திணிக்கிறீர்கள். கல்வியை பொதுப்பட்டியலுக்கு சென்றதால்தான் இந்த பிரச...