இந்தியா, ஏப்ரல் 7 -- "பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழ் மொழியின் தொன்மையை உலக அரங்கில் பறைசாற்றுகிறார்" என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டி உள்ளார்.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற "சொல் தமிழா சொல்" என்ற பேச்சுப் போட்டி நிகழ்ச்சியில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரதமர் நரேந்திர மோடியை உணர்ச்சி பொங்க புகழ்ந்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நிகழ்ச்சியில் பேசிய சீமான், மோடியை "மாண்புமிக்க ஐயா" என்று அழைத்து, தமிழ் மொழியின் தொன்மையை உலக அரங்கில் பறைசாற்றுவதாக பாராட்டினார்.

சீமான் தனது பேச்சில், "இந்த நாட்டின் பிரதமர்,...