இந்தியா, பிப்ரவரி 10 -- பெரியாரை உலகமே ஏற்றுக் கொண்டாலும், நான் ஏற்கப்போவது இல்லை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிகாரத்தை கொண்டு என்னதான் வேலை செய்தாலும் நேர்மையான மக்கள் உள்ளார்கள் என்பது ஈரோடு கிழக்கு தேர்தல் ஒரு சான்று. கட்டுத் தொகை எங்களுக்கு பொருட்டு அல்ல, திமுக ஆர்.கே.நகரிலும், அதிமுக பென்னாகரத்திலும் கட்டுத் தொகையை பெறவில்லை. ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சி கட்டுத் தொகையை பெற்றுவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்தார்கள்.

ஈரோடு கிழக்கில் வாழும் என் அன்பு சொந்தங்களுக்கு நன்றி, மொழி, இனம், சாதி, மதத்தை தாண்டி எங்களுக்கு வாக்கு அளித்தது பெருமைக்குரியது. 25 ஆயிரம் வாக்குகளை பெற்றது...