இந்தியா, ஏப்ரல் 6 -- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசவில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்து உள்ளார்.

நேற்றைய தினம் சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து காட்டாங்குளத்தூரில் உள்ளஎஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர், அவர் கிண்டியில் உள்ள ஐடிசி நட்சட்திர விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில், நேற்று இரவு 8:30 மணியளவில் சீமான் அவரை சந்தித்ததாகவும், இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்ததாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் நிர்மலா சீதாராமனை சந்தித்து உள்ளார் என ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

மேலும் படிக்க:- Anbumani: 'ஏது தமிழ்நாடு பொருளாதரம் வளர்ந்துடுச்சா? இது தெரியுமா...