இந்தியா, பிப்ரவரி 6 -- 'தொடர்ந்து நீதிமன்றத்திற்கு வந்தால்தான் சீமான் பேச்சில் நிதானம் வரும்' என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் தெரிவித்து உள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் "பிரபாகரனை பயங்கரவாதி என்று சொல்கிறார்கள். காந்தியை கோட்சே சுட்டது சரிதான் என இப்போது பேசுகிறார்கள். இணையதளத்தில் அந்த காட்சிகள் உள்ளது. அதேபோல்தான் ராஜீவ் காந்தியை கொன்றதும் சரிதான்" என பேசி இருந்தார்.

இந்த பேச்சு பெரும் சர்ச்சையான நிலையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் இருந்...