இந்தியா, ஜனவரி 26 -- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் விருந்து வைத்தது உண்மை என தமிழீழ அரசியல்துறை அறிக்கை வெளியிட்டு உள்ளது. இது தொடர்பான விவரங்களை நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் இடும்பாவனம் கார்த்திக் தனது 'எக்ஸ்' தள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

அதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தமிழன் சீமான் அவர்களின் தமிழீழப் பயணம் மற்றும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுடனான சந்திப்புத் தொடர்பான, உண்மைகளைத் தெளிவூட்டும் அறிக்கையொன்றை வெளியிட வேண்டிய அவசியம் அனைத்து நாடுகளில் இயங்கிவரும். தமிழீழ அரசியல்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தப் பயணம் தொடர்பான உண்மைகளை, உரிய தருணத்தில் உறுதிப்படுத்த, நாம் தவறுவோமாயின் பேரெழுச்சியுடன் வளர்ந்து வர...