இந்தியா, பிப்ரவரி 13 -- தினம் தோறும் உணவில் அதிக அளவில் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என மறுத்துவர்களே பரிந்துரை செய்கின்றனர். காய்கறிகளில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் பல வகையான ஊட்டச்சத்துக்கள் நமது உடலின் ஆரோக்கியத்திற்கு அவசியமாகும். ஆனால் நம் வீட்டில் உள்ள குழந்தைகள் காய்கறிகளை கண்டாலே சரியாக சாப்பிடுவதில்லை. அவர்கள் விரும்பும் சுவையில் இந்த காய்கறிகள் இல்லாமல் இருப்பதால் தான். அதற்கு ஒரே தீர்வு சுவையான காய்கறிகளை சமைத்து கொடுப்பது தான். எனவே ஒவ்வொரு நாளும் ஒரு விதமான காய்கறிகளை வைத்து சுவையான சமையல் செய்யலாம். கோவைக்காய் பல விதமான சத்துக்களை கொண்ட காய்கறியாகும். கோவைக்காய் வைத்து குழம்பு, பொரியல் போன்றவைகளை செய்யலாம். இன்று கோவைக்காயை வைத்து சுவையான கோவைக்காய் மசாலா செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படிய...