இந்தியா, மார்ச் 6 -- Savukku Shankar : சவுக்கு மீடியாவில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி குறித்து சவுக்கு சங்கர் பேசிய கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அப்படி என்ன பேசினார் சவுக்கு சங்கர்? இதோ பார்க்கலாம்.

''ராஜ்யசபா எம்.பி.,களின் பதவிக் காலம் நிறைவடையும் நிலையில், தற்போது இருக்கும் எண்ணிக்கையில் திமுகவுக்கு 4, அதிமுகவுக்கு 2 எம்.பி.,கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதிமுகவிற்கு இரண்டாவது எம்.பி., சீட்டுக்கு கூடுதலாக பாஜகவின் 4 எம்.எல்.ஏ., அல்லது பாமகவின் எம்.எல்.ஏ.,கள் ஆதரவு முக்கியம். இல்லையென்றால் திமுக 5வது வேட்பாளர் போடக்கூடாது. இது நடந்தால் மட்டுமே அதிமுக.,வுக்கு எம்.பி., கிடைப்பார். அரசியலில் எப்போது மறைந்த காலத்தைப் பற்றி யோசிக்க மாட்டார்கள், எதிர்காலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு முடிவுகள் எடுப்பார்கள்....